வாடகை ஹெலிகொப்பரரில் வந்து பிறந்தநாள் கொண்டடிய பெண்….. சிறுப்பிட்டியில் சம்பவம்!!
யாழ்ப்பாணம் வடமராட்சியில் இளைஞர் ஒருவர் பட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்ட விடயம் வைரலாகியுள்ள அதேநேரம், யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் இன்னொரு சுவாரசிய சம்பவமும் நடந்துள்ளது.
தனது பிறந்தாள் கொண்டாட்டத்துக்காக பெண் ஒருவர் ஹெலிகொப்பரரில் வந்து சிறுப்பிட்டியில் இறங்கியுள்ளார்.
வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஹெலிகொப்டர் மூலம் அவர் வந்திறங்கி தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார்.
அவர் ஹெலிகொப்டரில் வந்திறக்குவதைக் ஏராளாமானோர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றது.
இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்
நாட்டில் இப்போது விலைவாசிகள் அதிகரித்து, வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த முடியாது மக்கள் தவிக்கும் நேரத்தில் இவ்வாறான டாம்பீகம் தேவைதானா என்பன போன்ற விமர்சனங்களையும் சமூக வலைத்தளங்களில் காண முடிகின்றது.