மருந்துகளுக்கான திருத்தப்படட விலைகளுடன் வெளியானது புதிய அதிவிசேட வர்த்தமானி!!
அறுபது வகையான மருந்துகளுக்கான விலையில் திருத்தம் மேற்கொண்டு அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று(15) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் (Keheliya Rambukwella) வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,
மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டுச் சபை கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி, 2019 ஆம் ஆண்டு அறுபது வகையான மருந்துகள் தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளிலே குறிப்பிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.