2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில்!!
2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட கால பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிகள் டி20 முறையில் விளையாடப்படும் எனவும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன.
ஆசியக் கோப்பைப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும் ஆனால் கொவிட்-19 மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ACC) ரத்து செய்திருந்தது.
ஆசிய கோப்பையில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகள் அடங்கலாக ஆறு அணிகள் பங்கேற்கும்.
தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடையே நடைபெறும்.