நவம்பர் மாத இறுதிக்குள் மாத்திரம்….. 537.3 மில்லியன் USD அனுப்பிய இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் – 275000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு பயணம்!!
இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக நவம்பர் மாதத்தில் மாத்திரம் 537.3 மில்லியன் டொலர்களை அனுப்பியுள்ளதாகவும் இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அனுப்பிய தொகையை வீட 40 சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் தொழிலாளர்கள் 3.3 பில்லியன் டொலர்களை மாத்திரமே அணுப்பியுள்ளதாகவும்,
மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பணம் இலங்கைக்கான வெளிநாட்டு வருமானத்தின் முக்கிய வகிபாகம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில்,
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் 275000 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.