100,000 Pfizer Vaccine தொடர்பில் அமெரிக்க தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு!!
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு ஒரு இலட்சம் பைசர் தடுப்பூசிகளை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகள் இன்றைய தினம் (28) நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tweet ஐ பார்வையிட இங்கே சொடக்குக….
இந்த தடுப்பூசிகளை தாம் இலங்கை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
உயிர்களை பாதுகாத்து, பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.