தென்னிலங்கையில் சிக்கிய பெருமாளவான ஹெரோயின் போதைப்பொருள்!!
தென் மாகாணத்தை அண்மித்த கடற்பரப்பில், 290 கிலோகிராமிற்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருளுடன், 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுள்ளனர்.
படகொன்றில் கொண்டு சென்ற சந்தர்ப்பத்திலேயே, இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய, கடற்படையுடன் இணைந்து பொலிஸ் போதைப்பொருள் பிரிவு நடத்திய சுற்றி வளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
2321 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் தொகையே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.