ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில்!!
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனிவாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் இன்று (12/09/2022) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இந்த நிலையில்,
இலங்கையில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டங்களை பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் மூலம் அடக்கியமை வலியுறுத்தியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,
கைதுசெய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிக்குமாறு கோரி ஜெனிவாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை,
51ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதமும் இன்றைய தினம்(12/09/2022) இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.