பல்வேறு காரணங்களினால் காற்றின் தரம் மாசடைந்து வருகிறது இலங்கையில் இன்று [21.01.2026] காலை ஆரோக்கியமற்ற நிலைக்கு மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சிமையம் [NBRO]தெரிவித்துள்ளது.சிறி ஜெயவர்த்தனபுர கோட்டை,பொலன்னறுவை,அனுராதபுரம்,வவுனியா,
புத்தளம் மற்றும் காலி ஆகிய இடங்களில் காற்றின் தரம் இன்று காலை ஆரோக்கியம் அற்ற நிலைக்கு மாறியுள்ளதாக கட்டட ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
எனவே ,இவற்றின் காரணமாக உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் உணர்திறன் உள்ளவர்கள் மிகவும் கடுமையான உடல்நல பிரச்சனைகளை எதிர் நோக்க கூடும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றும் சுவாச பிரச்சனயும் ஏட்படக்கூடும் என்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
