மோசமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள்! பொது மக்களுக்கு இராணுவத்தளபதி எச்சரிக்கை!!
பொதுமக்கள் மற்றும் பல்வேறு வேலைத்தளங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் மற்றும் பயணத்தடை சட்ட தளர்வுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
மக்களுக்கும் பல்வேறு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் தளர்வுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றதாகவும் குற்றம் சுமத்தினார்.
இதுபோன்ற சட்டவிரோத செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைத்து மக்களுக்கும் இராணுவத்தளபதி கோரிக்கை விடுத்தார்.
இவ்வாறு சட்டங்களை மீறி நடந்தால் கொரோனாவை கட்டுப்படுத்துவது கடினம் என்றும் கூறினார்.
பலரின் நடத்தை நன்றாக இருந்தபோதிலும், சிலரின் நடத்தை மிகவும் மோசமானது என்றும் நேற்று பல முக்கிய வீதிகளில் மக்களின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எச்சரித்தார்.
இந்த சூழ்நிலையைத் தடுக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் கலந்துரையாடிய பின்னர் முறையான திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, சுகாதார சட்டங்களைப் பின்பற்றி வீட்டிலேயே பணிபுரியும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மக்களிடமிருந்து பெறப்பட்ட ஆதரவு மிகவும் முக்கியமானது என்றார்.