இணையவழியில் மாணவர்களுக்கு மனதளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – வைத்தியர் எச்சரிக்கை
இணையத்தின் மூலமான கல்வி நடவடிக்கையால் மாணவர்கள் இணைய விளையாட்டுகளில் அதிகளவில் ஈர்க்கப்படுகின்றார்கள் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கின்றனர்.
மேலும், பாடசாலை கல்வி முறை குறைவடைவதால் மாணவர்களிடையே மனநலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ நிபுணர் வைத்தியர் தர்சனி ஹெட்டியாராச்சி (Darshani Hettiarachchi) சுட்டிக்காட்டுகிறார். இதேவேளை, பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது, இணைய கல்வி முறையால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியைத் தொடர தயங்கலாம். மேலும் சில மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும் அபாய நிலையும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.