97% அதிபர்களும், 89% ஆசிரியர்களும், 45% மாணவர்களும் வருகை…… பேராசிரியர் கபில பெரேரா!!
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1-5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா (K.Kapila C.K.Perera) தெரிவித்தார்.
அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தனர்.
பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகின.
இரண்டாவது கட்டமாக பாடசாலைகள் நேற்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளே ஆரம்பிக்கப்பட்டன. இதில் 9,155 பாடசாலைகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.