184 பேருடன் பறந்து கொண்டிருக்கும் போது….. திடீரென தீப்பற்றி எரிந்த விமானம்!!
டெல்லியில் இருந்து நேற்று (28/10/2022) ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் திடீரென தீப்பொறி இரவு பெங்களூர் புறப்பட்ட விமானமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இண்டிகோ(IndiGo) பதிவு இலக்கம் 6E 2131 என்ற விமானம் இவ்வாறு ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் திடீரென தீப்பொறி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து,
குறித்த விமானம் அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இருப்பினும்,
தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
இதேவேளை,
விமானத்தில் 177 பயணிகளும், 7 விமான பணியாளர்களும் பயணித்துள்ளதாகவும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.