சீனி விலை அதிகரிப்பை தடுக்க, இறக்குமதியாளர்களால் வழங்கப்பட் ஆலோசனை!!
சீனி விலையை கட்டுப்படுத்த இறக்குமதியாளர்கள் தீர்வொன்றை தெரிவித்துள்ளனர்.
இதன்படி சீனியை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர் தொகையை வங்கிகளுக்கு வழங்குமாறு சீனி இறக்குமதியாளர்கள் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிடம்(Lasantha Alagiyawanna) கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதன் மூலம் சீனி இறக்குமதியை முறைப்படுத்தி கட்டுப்பாட்டு விலையில் வழங்க முடியும் என சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் நேற்று (27) பிற்பகல் அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளது. சீனிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், பல கடைகளில் அந்த விலைக்கு சீனி விற்பனை செய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்து.