மன்னாரில் 13 வயது சிறுமி காணாமல் போய் கண்டுபிடித்து ஒரு நாளில்….. தவறான முடிவெடுத்து மரணித்த சோகம்!!
மன்னாரில் 13 வயதுடைய சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் பிரதான வீதி,எருக்கலம்பிட்டி 1 ஆம் வட்டார பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று திங்கட்கிழமை(12/02 /2024) அதிகாலை அவரது வீட்டில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுமி சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் வவுனியாவில் இருந்து மீட்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (11/02/2024) வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் குறித்த துயர சம்பவம் இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது. Read More
Read more