நிவாரண விலையில் மாதாந்தம் 15kg 1kg கோதுமை மா 80 ரூபா வீதம்!!
பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில் மாதாந்தம் 15kg வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) அறிவித்துள்ளார். அதேபோன்று, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 75 ரூபாவை விவசாயிகளுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 பேர்சர்ஸ்க்கு குறைவான விவசாய நிலங்களை கொண்டுள்ள விவசாயிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திடீர் சலுகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more