போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு….. அஜித் ரோஹன!!

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்திருந்த மிரிஹான பகுதியில் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் 53 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 18 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 24 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் பொதுக்கள் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் களுபோவில, ஸ்ரீஜயவர்தனபுர மற்றும் கொழும்பு Read More

Read more

சூர்யா-பாலா கூட்டணியின் சூர்யா 41-வது படத்தில் “கீர்த்தி ஷெட்டி”!!

சூர்யா-பாலா கூட்டணியின் சூர்யா 41-வது படத்தில் பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் சூர்யா41 படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இவர்கள் மீண்டும் இணைவதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். Read More

Read more

இன்றைய மின்வெட்டு தொடர்பான முக்கிய அறிவித்தல்!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இன்றும் நாடு முழுவதும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 03 பிரிவுகளில் இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது. 541 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் மின் தடையை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக Read More

Read more

இன்று நாடுமுழுவதும் ஒரு மணிநேர மின் வெட்டு!

நாளாந்த மின் துண்டிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ( Janaka Ratnayake) தெரிவித்துள்ளார். அதன்படி, பிற்பகல் 2.30 மணியிலிருந்து 6.30 மணிவரை ஒரு மணிநேர மின் துண்டிப்பும், மாலை 6.30 முதல் இரவு 10.30 மணிவரை 45 நிமிடமும் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நேர அளவு நாளாந்த நிலைமையின் அடிப்படையிலேயே இந்த தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

Read more

மின்னலொன்று படைத்தது புதிய சாதனை….. ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு!!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இந்த மின்னலின் தூரம் லண்டன் நகரில் இருந்து ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரம் வரையான தூரத்திற்கு சமமானது என அளவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிப்பி, லூசியானா மற்றும் டெக்சாஸ் முழுவதும் 770 கிலோமீட்டர் தூரம் இந்த மின்னல் தெரிந்ததாகவும் ஐ.நாவின் உலக வானிலை அமைப்பு Read More

Read more

திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு…… ஜேர்மனியில் சம்பவம்!!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து Read More

Read more

“பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்…..” – அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே!!

காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் கல்வி நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கு பொது மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு, காய்ச்சல், இருமல் இருக்கும் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாமென்றும் பெற்றோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இருமல், காய்ச்சல் இருப்பவர்கள் வேலைக்கு செல்லவும் வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Read more

யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியைச் சேர்ந்த இளைஞன் கீரிமலை கடலில்  கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்!!

கீரிமலை கடலில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞன் ஒருவர்  கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் – தட்டாதெரு பகுதியைச் சேர்ந்த  சூரியகாந்தன் சஞ்சிவன் (வயது – 19) என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தனது நண்பர்கள் இருவருடன் கீரிமலை கடலில் நீராடிக்கொண்டு இருந்த போதே குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் உடனடியாக காங்கேசன்துறை காவல்துறையினருக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. காணாமல் போன இளைஞனை Read More

Read more

வானில் தோன்றிய தங்கத்தால் ஆன கை போன்ற உருவம்….. நாசாவின் விளக்கம்!!

தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு படத்தினை நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அது ‘கடவுளின் கை’ (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்து நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது. தொடர்ந்தும் அந்தப் பதிவில், விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் Read More

Read more

வடக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “குலாப்” சூறாவளி!!

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக Read More

Read more