கல்கிசை – காங்கேசன்துறை குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை ஆரம்பம்!!

கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில் சேவை, 8 பெட்டிகளுடன் இன்று (09) பயணத்தை ஆரம்பித்தது. இன்று (09) அதிகாலை 5.10 மணியளவில் கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த ரயில், நண்பகல் 12.15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையம் வரை பயணித்தது. மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி ரயில், 1.37 மணிக்கு யாழ். புகையிரத நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்தது. Read More

Read more