வேலைக்க வெளிநாடு சென்று வந்து மீண்டும் செல்ல உள்ளோருக்கு புதிய சட்டம்!!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு வழங்குவதில் பரிசீலிக்கப்படும் விடயங்கள் தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு திரும்பி வந்து வேலைக்காக மீண்டும் வெளிநாடு செல்லும் போது செய்யப்படும் பதிவு தொடர்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் உரிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டிருந்த போது சட்டரீதியான முறையில் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ள டொலர்களின் எண்ணிக்கை தொடர்பில் கண்டறியப்படவுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.   அதனடிப்படையில், Read More

Read more

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா!!

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் Read More

Read more

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சந்தோசமான செய்தி!!

இலங்கைக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகள், பூரண தடுப்பூசியை செலுத்திக்கொண்டிருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு கொவிட் பரிசோதனை அவசியமற்றது என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச ( Upul Dharmadasa)  தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “இலங்கைக்கு வருகைத் தருவதற்கு முன்னர், பூரண தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும். கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை செலுத்திக்கொண்டமையானது பூரண Read More

Read more

அவுஸ்திரேலியாவில் இரு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்த இலங்கையர் (புகைப்படங்கள்)!!

தனது இரு குழந்தைகளை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நபர் இலங்கையர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவுஸ்திரேலிய காவல்துறையினர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இந்திக்க குணதிலக்க (வயது – 40) என்ற நபரே இவ்வாறு தற்கொலை  செய்துகொண்டுள்ளார். சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 Read More

Read more

வெளிநாட்டு மணமகன், மணமகளுக்கு காத்திருப்பவர்களுக்கு 2022 இலிருந்து புதிய விதிமுறைகளாக இலங்கை அரசு வைக்க்வுள்ள ஆப்பு!!

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெற வேண்டும் எனும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உரிய விசா அனுமதிப் பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரமே அவசியமாக காணப்பட்டது. இருப்பினும், தேசிய பாதுகாப்புக்கு Read More

Read more

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தவர்கள் உட்பட 19 பேரைக் கைது!!

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக செய்துள்ளதாக சிறிலங்கா கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிலாபம் கடற்கரைப்பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வழமை போன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், 16 ஆண்களும் 1 பெண் மற்றும் 4 சிறுவர்கள் உள்ளடங்களாக 19 பேர் அடங்குவதாக மேலும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, நீர்கொழும்பு மற்றும் Read More

Read more

தமது எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறவுள்ள சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள்!!

தமது எதிர்காலம் மற்றும் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டு சுமார் ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸநாயக்க(Mayantha Dissanayake) இதனைத் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 1983 ஆம் இடம்பெற்ற கலவரம் அல்லது மோதலின் போது கூட இவ்வளவு பாரிய தொகையானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்த அபிவிருத்தி ஏமாற்றமளிப்பதாக தெரிவித்த அவர்,இளைஞர்களின் Read More

Read more

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தமது உழைப்பின் ஒரு பகுதியை தாய்நாட்டுக்கு அனுப்பினால் எமது பொருளாதாரத்துக்கு அது மிகவும் பயனுடையதாக இருக்கும் ….. ஜீ.எல்.பீரிஸ்!!

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர் தமது உழைப்பின் ஒருபகுதியை நாட்டுக்கு அனுப்புமாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அனுப்பப்படும் ஒவ்வொரு டொலருக்கும் பெறுமதியை காட்டிலும் மேலதிகமாக இரண்டு ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இத்தாலியில் இடம்பெறும் நிகழ்வு ஒன்றிலேயே இதை குறிப்பிட்டார். “வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு தமது நாடுதான் அடையாளம். என்றாலும் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டின் அரச தலைவரை விமர்சித்தல், கறுப்புக் கொடிகளை காண்பித்தல் உட்பட பல்வேறு விடயங்களை செய்வது அரசுக்கு எதிரானதாக அமையாது வெளிநாடுகளிலிருந்துக்கொண்டு Read More

Read more

20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிரமம்….. உபுல் ரோஹண!!

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரவுள்ள மாணவர்கள் பலர் எழுத்துபூர்வ அல்லது பிற ஆவணங்களுடன் விரும்பிய தடுப்பூசியை பெற முயற்சிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண Read More

Read more

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் 

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் எனவும் அறிவித்துள்ளது. அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more