26 பயணிகளுடன் சென்ற பேருந்து 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து – சரியாக கூறப்படாத உயிரிழப்புகள் – கவலைக்கிடமான நிலையில் பலர்….. முழுமையான அலசல்!!

முதலாம் பகுதி பூண்டுலோயா காவல்துறை பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை – வட்டக்கொடையில் இருந்து மடக்கும்புர பகுதியை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று துனுகெதெனிய, கிரிடிகெட்டிய பிரதேசத்தில் நேற்று(09/07/2023) மாலை வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பூண்டுலோயா காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 26 பேர் பயணித்துள்ளதுடன் இதில் காயமடைந்த 24 பேரை கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலதிக சிகிச்சைக்காக Read More

Read more

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பாடசாலை பேருந்துடன் மோதியது தனியார் பயணிகள் பேருந்து….. 5 மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!

தியத்தலாவை பகுதியில் பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று(16/06/2023) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொரலந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கிப் பயணித்த பேருந்துடன் மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது, சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில், Read More

Read more

பந்தயத்தால் நடந்த விபரீதம் – பரிதாபமாக உயிரிழந்த 18 வயது இளைஞர்கள்

பண்டாரகம – மொரன்துடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் உந்துருளி பந்தயம் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த விபத்தில் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

Read more