யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திற்கான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவையை ஜூலை 01 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் பதிவொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்களின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்…………………. எதிர்வரும் வரும் மாதங்களில் மேலும் பல உள்நாட்டு இடங்களுக்கு சேவைகளை முன்னெடுக்க டிபி ஏவியேஷன் நிறுவனத்துடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாக Read More

Read more

7800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு 800km/h கதியில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்ககூடிய சீனாவின் ஆளில்லா விமானம்!!

சீனா தான் உருவாக்கிய தனது பிரமாண்டமான புதிய ஆளில்லா உளவு விமானத்தை பார்வைக்கு வைத்துள்ளது. அந்நாட்டில் நடக்கும் விமானக் கண்காட்சியில் CH-6 என்று பெயரிடப்பட்டுள்ள ட்ரோன் வைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச உயரத்திலும், தூரத்தில் உள்ள இலக்கை குறிதவறாமல் தாக்குவதில் நிகரற்றும் CH-6 விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மணிக்கு 800 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் பறக்கமுடியும். இந்த உளவு விமானத்தில் 7 ஆயிரத்து 800 கிலோ எடை வரை ஆயுதங்களை எடுத்துச் செல்லமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more