நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி!!

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ரூ நவமுனி குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த நிலக்கரி போதுமானதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்றைய தினம்(03/05/2022) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை Read More

Read more

தென்னாபிரிக்காவில் பெருவெள்ளம்…. 395 பேர் மரணம்!!

தென்னாபிரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. தென்னாபிரிக்காவின் குவாஜுலு – நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையும் அந்த பெருவெள்ளத்தில் சிக்கி பலர்  உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

Read more