அரச காணிகள் 1500 ஏக்கரில் இராணுவத்தினரால் விவசாயம்!!

நாடு முழுவதும் உள்ள தரிசு நிலத்தில் அல்லது கைவிடப்பட்ட நிலத்தில் அரச காணிகள் உள்ளடங்களாக 1500 ஏக்கரில் விவசாயம் மேற்கொண்டுஇலங்கை உணவு பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்தை மேம்படுத்தும் முகமாக இராணுவத்தின் பசுமை விவசாய வழிகாட்டல் குழு நிறுவப்பட்டுள்ளது. அரச தலைவரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் இந்த அவசர ஏற்பாடு ஆரம்பிக்கப்பட உள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பிரதி நிலை மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய இத் திட்டத்தின் Read More

Read more

நாடு முழுவதும்  ஆயுதம் தாங்கிய படையினர்….. கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்டது விசேட கட்டளை!!

இலங்கை ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக கோட்டாபய ராஜபக்சவினால் விசேட கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் நலனுக்காகவே இந்தக் கட்ளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பொது மக்களின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும்  ஆயுதம் தாங்கிய படையினரை கடமையில் ஈடுபடுத்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட கட்டளை தொடர்பில் சபாநாயகர் சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 40ஆவது அதிகார சபையான  பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது உறுப்புரையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள Read More

Read more

எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் சொந்த துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.   22 வயதான குறித்த இராணுவ வீரரின் சடலம் இன்று அதிகாலை வெள்ளவத்தையில் மீட்கப்பட்டுள்ளது.   உயிரிழந்தவர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனின் கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு செல்லும் ஒழுங்கையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தார் என மேலும் குறிப்பிடப்படுகின்றது.

Read more

‘சவேந்திர சில்வா’ பதவி விலகல்….. புதிய இராணுவ தளபதியாக ‘ஜெனரல் விக்கும் லியனகே’!!

சிறிலங்கா இராணுவ தளபதி சவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 31 அன்று இராணுவத் தளபதி பதவியை சவேந்திர சில்வா இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இராணுவ கட்டமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. இந்நிலையிலேயே, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தம்மை பாதுக்காக இராணுவத்தினர் Read More

Read more

படிப்படியாக ரஷ்யா படைகளை அடித்து விரட்டும் உக்ரைன் படைகள்….. உக்ரைன் ராணுவத்தளபதி வெளியிடட புகைப்படங்கள் மற்றும் செய்தி!!

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே 60 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள மக்காரிவ் என்ற நகரை ஆக்கிரமித்திருந்த ரஷ்ய படையினரை அங்கிருந்து விரட்டியடித்துவிட்டதாக உக்ரைன் படைத்தளபதி தெரிவித்துள்ளார். உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதற்கு ரஷ்ய படைகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன. இதன் ஒரு அங்கமாக தலைநகர் கீவை அண்மித்த பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் அவை ஈடுபட்டுள்ளன. இவ்வாறு ரஷ்ய படை ஆக்கிரமித்திருந்த மக்காரிவ் என்ற பகுதியிலிருந்தே அந்தப்படையை ஓட ஓட விரட்டியடித்ததாக உக்ரைன் படைத்தளபதி தெரிவித்துள்ளார். Read More

Read more

ரஷ்யா படைகளை 70கி.மி வரை அடித்து துரத்தியது உக்ரைன் படை!!

உக்ரைன் தலைநகருக்கு வெளியே ரஷ்ய படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் இராணுவம் மீண்டும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கீவ்வின் புறநகர் பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்களை ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளது. மேலும், கீவ் நகரை நெருங்கி வந்த ரஷ்ய படைகளை 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு பின் நோக்கி செல்ல வைத்து இருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு கீவ் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் Read More

Read more

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read more

அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று உடல்களை தீயிட்டு அழித்த இராணுவ வீரர்கள்!!

மியன்மாரில் அப்பாவி மக்களை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் உடல்களை தீ வைத்து எரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் சமீப காலமாக இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை இராணுவம் கைது செய்து சித்ரவதை செய்து கொலை செய்வதாக தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், மியன்மாரின் கிழக்கு பகுதியில் கயா மாகாணத்தில் உள்ள மோ சோ கிராமத்தில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 30 பேரை இராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்று அவர்களின் Read More

Read more

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுங்கள்….. அமைச்சர் சரத் வீரசேகர!!

அடுத்த வரும் நாட்களில் பண்டிகைக்காக பொது மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதனால் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சரத் வீரசேக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நடமாடும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ரோந்துகளை Read More

Read more

எதிர்வரும் 30 வரை விதிக்கப்பட்ட தடை….. கடுமையான எச்சரிக்கை!!

பொதுக் கூட்டங்கள், வெளிப்புற கூட்ட நிகழ்வுகளுக்கு நவம்பர் 30ஆம் திகதி வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வீடுகளில் கூட 10 இற்கும் மேற்பட்ட வெளியாட்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புதிய சுகாதார வழிகாட்டியினை சுகாதார அமைச்சு நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. மேலும், இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் இந்த தடை நடைமுறையில் இருக்கும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Read more