இந்தியா-இங்கிலாந்து இணைந்து தயாரித்த தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது. இதே தடுப்பூசி இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவது வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Read more

கொரோனாவின் அடுத்த அவதாரம்(A30)….. இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இலங்கையும் – ஹேமந்த ஹேரத்!!

உலகில் பல நாடுகள் A 30 கொரோனா வைரஸ் திரிபு குறித்து  கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த திரிபை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து Read More

Read more

இலங்கையின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கிய பிரித்தானியா!!

முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ் இன்று (01) முதல் பிரித்தானியாவிற்குள் பிரவேசிப்பதற்கு இலங்கையின் தடுப்பூசி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், Oxford/AstraZeneca, Pfizer BioNTech, Moderna, Janssen ஆகிய தடுப்பூசி வகைகள் பிரித்தானியாவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனை தவிர, AstraZeneca Covishield, AstraZeneca Vaxzevria மற்றும் Moderna Takeda தடுப்பூசிகளும் பிரித்தானியாவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. முழுமையான தடுப்பூசி சட்டத்தின் கீழ், சுற்றுலா பயணிகள் பிரித்தானியாவிற்கு வருகை தருவதாயின், குறைந்தது 14 நாட்களுக்கு முன்னர் முழுமையாக Read More

Read more

2 Dose Sinopharm பெற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது Dose Moderna /Pfizer /AstraZeneca!!

2 சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர், எஸ்ட்ரா செனேகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்குவது அவசியம் என்று விசேட மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதேவேளை, 20 – 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்துவது முறையற்றதெனவும் அது விஞ்ஞானபூர்வ தரவுகளை மீறும் செயற்பாடு என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி வழங்குவது தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள் அதற்காக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் நிபுணர்கள் குழு, உலக Read More

Read more

மக்களுக்கு சிறந்த கொரோனா தடுப்பூசி இதுதான் – ஆய்வின் முடிவில் உறுதி!!

டெல்டா கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பிறழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசி 95 வீதம் பலனளிக்கின்றது என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் வைத்தியர் பேராசிரியர் ஹேமந்த டொடம்பஹால தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆராய்ச்சியின் பின்னர் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனேகா கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது இரண்டாவது டோஸ்கள் இந்த ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் அவை Read More

Read more

தடுப்பூசி பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆகஸ்ட் 12 வரை 146 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் பெப்ரவரி 16 ஆம் திகதி தொடங்கியது. எனினும், இப்போது வரை 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாரஹேன்பிட்ட, இராணுவ மருத்துவமனையில் இந்தியாவின் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் Read More

Read more

அஸ்ட்ராசெனெகா போதுமான அளவு உள்ளது – வைத்தியர் விளக்கம்!!

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸை வழங்க போதுமான அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தடுப்பூசியை நிர்வகிப்பதற்காக நிறுவப்பட்ட தடுப்பூசி மையங்கள் பற்றிய தகவல்களுக்கு, சம்பந்தப்பட்ட சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) துறைகளை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார். இந்தியாவில் ஏற்பட்ட உள்ளூர் தேவையின் நிமிர்த்தம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆகையால் இலங்கையில் அத்தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு Read More

Read more

இரண்டாவது தடுப்பூசியாக Pfizer ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தம்!!

முதலாவதாக AstraZeneca தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாவதாக Pfizer தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். நாட்டிற்கு தேவையான AstraZeneca தடுப்பூசிகளை இம்மாத இறுதிக்குள் வழங்குவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாக அவர் கூறினார். குறித்த தொகை தடுப்பூசி கிடைக்கப்பெற்றதும் முதலாவதாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் Read More

Read more