முச்சக்கர வண்டிகளில் கட்டணம் செலுத்தி அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதி!!
முச்சக்கர வண்டிகளில் அலங்காரங்களை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பல்வேறு அணிகலன்கள் மற்றும் அலங்காரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அலங்காரங்களை நிறுவுதல் 30 வகைகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதாகவும் மேலதிக தகவல்களை இணையத்தளத்திலோ அல்லது முச்சக்கரவண்டி ஒதுக்கீட்டுக் கிளையிலோ 0113484520 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் திரு.நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Read more