ஒருபக்கம் சமாதான பேச்சுவார்த்தை, மறுபக்கம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை குழப்பும் புடின்!!
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பரீட்சித்துள்ளது. ஏவுகணை பரீட்சிக்கப்பட்ட காணொளியையும் ரஷ்யா வௌியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் வட மேற்கு பகுதியிலுள்ள ஆர்க்காங்கெல்ஸ்கில் அமைந்துள்ள ‘பிளெசெட்ஸ்க்’ (Plechetsk) விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ரஷ்யாவின் கிழக்கு “கம்சட்கா தீபகற்பத்தில்” (Kamchatka Peninsula) தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிந்தனைக்கான உணவு என ரஷ்ய ஜனாதிபதி “விளாடிமீர் புட்டின்” தெரிவித்துள்ளார்
Read more