கல்லடி பாலத்திற்கு கீழ் சடலமாக மீட்கப்பட்டார் 22 வயது யுவதி!!

மட்டக்களப்பு – கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பெண்ணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(31/05/2023) மாலை இடம்பெற்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், கல்லடி பாலத்திற்கு அருகில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள பண்டிக்ஸ் வீதியினை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

ஒரே நேரத்தில் 40+ உயிர்கள் பலி!!

மட்டக்களப்பு – வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் உயிரிழந்துள்ளன. மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப்பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில் மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகளே இவ்வாறு நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தன. இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன. இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் கஸ்டமான சூழ்நிலையில் அன்றாடம் தொழிலுக்காக Read More

Read more

மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம் (புகைப்படங்கள்)!!

மட்டக்களப்பு கதிரவெளியைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கடலில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்கள். நேற்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 வயதுடைய ஜீவானந்தம் நிமால்ராஜ், 23 வயதுடைய புலேந்திரன் அனுஜன்மற்றும் 25 வயதுடைய தங்கவேல் தகிசன் போன்ற இளைஞர்களே இவ்வாறு கடலில் மூழ்கி மரணமடைந்திருந்தார்கள். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

மட்டக்களப்பில் நகைக்காக வர்த்தகரின் மனைவி கொடூரமாக கொலை!!

மட்டக்களப்பு – அரசடி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம்(21) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். அரசடியிலுள்ள வர்த்தகரின் வீட்டிற்கு வழமையாக வேலை செய்யும் தந்தையும் மகளுமே வர்த்தகரின் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டிலுள்ள நகைகளைக் கொள்ளையிடுவதற்காக சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயலை செய்துள்ளனர். கொலை Read More

Read more

மட்டக்க்ளப்பில் பூசாரி வேடத்தில் வீடுகளிற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட 31 வயது பெண் கைது!!

மட்டக்களப்பு பகுதியில்  பூசாரி வேடத்தில் வந்த பெண் ஒருவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் Read More

Read more

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்….. ஸ்தலத்திலே பலியானார் குடும்பஸ்தர்!!

மட்டக்களப்பு சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் நேற்று செவ்வாய் கிழமை இரவு 7மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த கன்ரர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் வயது 51 என்பவரே உயிரிழந்துள்ளார் Read More

Read more

மட்டக்களப்பில் முற்றுகையிடப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன் போது ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் கசிப்பு, கோடா பரல்கள் போன்றவையும் மீட்கப்பட்டதாக ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எம். ஆர். எஸ். கோணர தெரிவித்தார். ஆயித்தியமலை கற்பானைக் குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டபோது புலனாய்வு பிரிவின் இரகசிய தகவலுக்கமைவாக  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பில் மூன்று பரல் கோடா, 25 லீற்றர் கசிப்பு மற்றும் Read More

Read more

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லை!!

கெரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு யாரும் பணம் செலுத்தத் தேவையில்லையென மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். சூடுபத்தினசேனையில் புதைப்பதற்கு எந்த விதமான பணமும் அறவிடுவதில்லை. ஆனால் குறித்த உடலத்தை எரிப்பதாயின் மன்னம்பிட்டியில் உள்ள தகன சாலைக்கு 12 ஆயிரம் கட்டவேண்டிய நிலையுள்ளது. அதனையும் கட்ட கூடிய வசதி இல்லாதவிடத்து அரசாங்கத்தினால் இலவசமாக எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்காக 40 Read More

Read more

சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு ஒன்று தீ வைத்த விசமிகள்!!

மட்டக்களப்பு பெரிய உப்போடை லேக் வீதியில் உள்ள களப்பு பகுதியில் வைத்து மீனவரின் படகு ஒன்று தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடேந்தேறியுள்ளது. சுமார் 6 லட்சம் மதிக்கத்தக்க படகு மற்றும் வலை இயந்திரம் உட்பட அனைத்தும் முற்றாக கருகி நாசமாகியுள்ளன. இன்று அதிகாலை 4 மணிக்கு தொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே இவ்வாறு படகு தீ பற்றி எரிவதை அவதானித்துள்ளனர். மட்டக்களப்பு நாவலடி சுவிஸ் கிராமத்தை சேர்ந்த மீனவர் ஒருவரின் படகே இவ்வாறு இனம் Read More

Read more

தலைக்கவச பிரச்சினையால் பெண் ஒருவர் அடித்து கொலை!!!!

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டதுடன், பெண் மீது தாக்குதல் நடாத்தியவர் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயித்தியமலை உன்னிச்சை வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் வீட்டிற்கு அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்களான இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை நிறுத்திவிட்டு Read More

Read more