12 வயதில் உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் பல்கலைக்கழக பட்டமொன்றை பெறவுள்ள சிறுமி!!

கனடாவில் 12 வயது சிறுமியொருவர் பல்கலைக்கழக பட்டமொன்றை பெற்று சாதனை நிலைநாட்ட உள்ளார். கனடாவின் ஒட்டாவா பல்கலைக்கழத்தில்(University of Ottawa) உயிரியல் மருத்துவ விஞ்ஞான துறையில் இளநிலை பட்டம் பெற்றுக்கொள்ள உள்ளார். கனடிய வரலாற்றில் மிக இள வயதில் பல்கலைக்கழக பட்டம் பெற்றுக்கொண்டவர் என்ற சாதனையை அன்தியா கிரேஸ் பெட்ரிசியா டென்னிஸ்(Anthea Grace Patricia Dennis) என்ற குறித்த  சிறுமி பெற்றுக்கொள்ள உள்ளார். பெட்ரிசியா டென்னிஸ் தனது ஒன்பது வயதில் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார் என தெரிவிக்கப்படுகின்றது. Read More

Read more

13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கனடாவுக்கு visa இல்லமல் செல்ல அனுமதி….. கனடா அரசு அதிரடி அறிவிப்பு!!

13 நாடுகளைச் சேர்ந்தவர்கள், 06/06 /2023 முதல் விசா இன்றி கனடாவுக்கு விமானம் மூலம் பயணம் செய்யலாம் என கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதன்படி, 13 நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள் Temporary Residence Visa என்னும் தற்காலிக விசா இல்லாமலே கனடாவுக்கு பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாலும், இந்த சலுகை அந்த 13 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கனடா விசா வைத்திருந்தவர்களாகவோ அல்லது தற்போது Read More

Read more

10 பாலியல் குற்றச்சாட்டில் 13 வயது சிறுவன் கைது!!

கனடாவின் வடக்கு ஒன்றாரியோ பகுதியில் 13 வயது சிறுவன் மீது பத்து பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த சிறுவன் பாலியல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பல தடவைகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக குறித்த சிறுவனை நேற்றைய தினமும்(06/06/2023) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும், குறித்த சிறுவன் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் ஜூலை மாதம் 10ம் திகதி சிறுவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

“தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக” கனேடிய நாடாளுமன்றில் ‘மே 18’ அங்கீகரிப்பு!!

இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மே 18ஆம் திகதியை ‘தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக’ அங்கீகரித்ததற்கு இலங்கை அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணான அதாவது இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாகக் கண்டறியவில்லை. புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடிக்க நடாத்தப்பட்ட மோதலின் இறுதிக் கட்டத்தில் இலங்கையின் உண்மையான நிலைமை குறித்து கனேடிய அரசாங்கத்திற்கு மிக உயர்ந்த மட்டத்தில் Read More

Read more

கனடாவை சேர்ந்த சேர்ந்த 21 வயது பெண்ணின் மரணத்திற்கு இது தான் காரணமாம்!!

எட்மண்டனைச் சேர்ந்த 21 வயது பெண்ணான இவர் கடந்த 28ஆம் திகதி இறுதியாக எட்மண்டனின் மேற்கு முனையில் உள்ள பெல்மீட் சுற்றுப்புற பகுதியில் இருந்ததாக கூறப்படுகின்றது. McKinney வீட்டில் இருந்து வெளியே சென்ற போது எட்மண்டனில் கடுமையான குளிர் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வேளை, அவர் வானிலைக்கு ஏற்றவாறு ஆடை அணியவில்லை என்றும் அவரது பணப்பை, தொலைபேசி ஆகியவற்றை வீட்டிலேயே விட்டுச் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். McKinney காணாமல் போன சமயத்தில் அப்பகுதியில் குளிர் காற்றானது Read More

Read more

கனடாவில் அதிக வெப்பம் ; பலர் உயிரிழப்பு!!

கனடாவில் அதிக வெப்பத்தினால் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த வௌ்ளிக்கிழமை முதல், 140 இற்கும் அதிகமானோர் திடீர் மரணத்தை தழுவியதாக Vancouver நகர பொலிஸார் தெரிவித்தனர். வயது முதிர்ந்தவர்களே பெருமளவில் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொடச்சியாக மூன்றாவது நாளாக நேற்று (29) 49.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கனடாவில் 45 பாகை செல்சியஸ் வெப்பநிலை முன்னெப்போதும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்த வெப்பநிலை காரணமாக, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Read more

கனடாவில் அதிர்ச்சி சம்பவம்! பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள்!!

கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி 1890-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பள்ளியை பொறுப்பில் எடுத்தது. அதன்பின் 1978-ல் இந்த பள்ளி மூடப்பட்டது. ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்கவோ வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்துள்ளனர். எனினும், ரேடார் உதவியுடன் அந்த Read More

Read more

கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 122 பேர்

பிரிட்டன் உள்ளிட்ட மேலும் சில நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் 122 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ரஷ்யா, அவுஸ்திரேலியா, கனடா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக ஆயிரத்து 996 பேர் பயணித்துள்ளனர்.   இதன்படி இக் காலப்பகுதியில் 21 விசேட விமானங்கள் மூலம் ஆயிரத்து 254 Read More

Read more