நீச்சல் தடாகமொன்றின் நீரில் அதிகளவு குளோரின் சேர்க்கப்பட்டதனால் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!

கனடாவில் நீச்சல் தடாகமொன்றின் நீரில் அதிகளவு குளோரின் சேர்க்கப்பட்டதனால் ஒவ்வாமை காரணமாக ஐந்து பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நோர்த் யோர்க்கில் அமைந்துள்ள உடற்பயிற்சி நிலையமொன்றின் நீச்சல் தடாகமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.   யோங் மற்றும் ஷெபர்ட் வீதிகளுக்கு அருகாமையில் உள்ள நீச்சல் தாடகத்தில் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தொலைபேசி மூலம் தீயணைப்புப் படையினருக்கு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயனைப்புப் படையினர் விரைந்துள்ளனர். நீச்சல் தடாகத்தில் மித மிஞ்சிய அளவில் குளோரின் போடப்பட்டதனால் இவ்வாறு Read More

Read more

பட்டப்பகலில் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணுக்கு திரவத்தை ஊற்றி உயிருடன் தீ வைத்த நபர்!!

கனடாவின் ரொறன்ரோவில் பட்டப்பகலில் பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.   மேலும், இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளனர். இளம் Read More

Read more

கனடாவில் சிறிய ரக விமானம் விபத்து….. இருவர் பலி!!

கனடாவின் வடக்கு ஒன்ராறியோவில் இரண்டு பேருடன் கடந்த மாதம் மாயமான சிறிய விமானத்தின் சிதைவுகள் லேக் சுப்பீரியர் மாகாண பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்து தொடர்பில் ஒன்ராறியோ பிராந்திய காவல்துறையினர் கருத்து தெரிவிக்கையில், மாயமான விமானம் தொடர்பில் தமது ஹெலிகொப்டர் ஒன்றும், பொதுமக்கள் பயன்படுத்தும் ஹெலிகொப்டர் ஒன்றும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில் குறித்த சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்த இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் Read More

Read more

கனடாவில் காணாமல் போன யாழ் யுவதி தொடர்பில் அவரது குடுமத்தவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

கனடாவில் காணாமற்போன தமிழ் யுவதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்ற யுவதி கடந்த 16 ஆம் திகதி காணாமற் போயிருந்தார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கனடா ரொறன்டோ காவல்துறையினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் மாயம்!!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவரும் காணாமற் போயுள்ளதாக ரொறன்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் (29) என்ற இளைஞரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டார். குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படுகிறார். அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு Read More

Read more

கனடாவில் காணாமற்போன இளம் யுவதி!!

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் யுவதி ஒருவர் காணாமற்போன நிலையில் அவரை கண்டுபிடிக்க அந்நாட்டு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பிரசாந்தி அருச்சுனன் (28) என்பவரே காணாமற் போனவராவார். கடைசியாக ஜனவரி 16, 2022 அன்று இரவு 7:45 மணிக்கு ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ஃபின்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் காணப்பட்டார். நடுத்தர உடல், பழுப்பு நிற கண்கள், கருப்பு நேரான முடி மற்றும் நடுத்தர நிறம் என அவரது அங்க அடையாளங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவர் தொடர்பான தகவல் Read More

Read more