கனடாவில் காணாமல் போன யாழ் யுவதி தொடர்பில் அவரது குடுமத்தவர்கள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
கனடாவில் காணாமற்போன தமிழ் யுவதி உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தவர்கள் அறிவித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகவும் கனடா நோர்த் யோர்க்கை வதிவிடமாகவும் கொண்ட 28 வயதான பிரசாந்தி அர்ச்சுனன் என்ற யுவதி கடந்த 16 ஆம் திகதி காணாமற் போயிருந்தார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கனடா ரொறன்டோ காவல்துறையினர் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more