மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிக்கை….. கடந்த வருதத்தில் இருந்து 11.5% அதிகரிப்பு!!

முந்தைய ஆண்டை விடவும் 2024 செப்டம்பரில் இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் தொகை குறிப்பிடத்தக்க அதிகரிப்பை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயமானது, மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தெரியவந்துள்ளது. இதன்படி, இலங்கைக்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் செப்டம்பர் 2023 இல் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் இது 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான மொத்தப் பணம் 4,843.8 Read More

Read more

புதிய வரி அறவீட்டு முறைமைகளை பிரதமர் அறிவித்துள்ளமை நம்பிக்கையளிக்கிறது….. W.A.விஜேவர்தன!!

இலங்கை மத்திய வங்கி மீதான தேவையற்ற தலையீடுகள் நாட்டின் பொருளாதார மீட்சியைக் கேள்விக்குள்ளாக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.ஏ.விஜேவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்ட, நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பில் ஆராயும் நோக்கிலான கலந்துரையாடலில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “அரச ஊழியர்களுக்கான சம்பளக்கொடுப்பனவை இடையூறின்றி மேற்கொள்வதற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை அச்சிடவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட கருத்து பல்வேறு கரிசனைகளைத் Read More

Read more

இலங்கை ரூபா திடீரென வளர்ச்சி காண்கிறது….. இலங்கை மத்திய வங்கி!!

நாட்டில் இன்று டொலரின் பெறுமதி திடிரென வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 364.98 ரூபாவாகும். அமெரிக்க டொலர் ஒன்றின் நேற்றைய விற்பனை விலை 377.49 ரூபாவாகும். இதற்கமைய இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 12 ரூபாவால் வீழிச்சியடைந்துள்ளது. அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ மற்றும் ஸ்டெர்லிங் பவுண்களுக்கு எதிராகவும் ரூபாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்றையதினம் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க Read More

Read more

அவசர அறிவிப்பு வெளியிட்ட இலங்கை மத்திய வங்கி ஆளுநர்!!

வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்கிறார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal). இது குறித்த தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நுகர்வோரை அவதானமாக பணப் பரிமாற்றம் செய்யுமாறு கோரியுள்ளார். குறித்த பதிவில், “தமது அந்நிய செலாவணி வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கி வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது” Read More

Read more

அவசர எச்சரிக்கை விடுத்த மத்திய வங்கியும், காவல்துறை தலைமையகமும்!!

சந்தேகத்துக்கு இடமான நாணயத்தாள் ஒன்று காணப்பட்டால் பாதுகாப்புச் சின்னம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதனைத் தம்வசம் வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் போலி நாணயத்தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது. போலி நாணயத்தாள்களை வைத்திருந்தமை, பயன்படுத்துதல் அல்லது அச்சடித்தல் போன்ற குற்றங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாணயத்தாளை கொண்டுவந்தவர், அவரது தோற்றம், வாகனத்தில் வந்தால் வாகனத்தின் விவரம், Read More

Read more

2022 ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக தகவல்….. உண்மை நிலை என்ன??

இலங்கை மத்திய வங்கி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நாணயத்தாளை வெளியிடவுள்ளதாக சமூ ஊடகங்கள் வாயிலாக செய்தி பரப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 10 ஆயிரம் பெறுமதியான நாணயத் தாளை அச்சிடும் எவ்வித தயார் நிலையும் இல்லை என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை அச்சிட உள்ளதாக பொய்யான Read More

Read more

வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும்….. அஜித் நிவார்ட் கப்ரால்!!

புலம்பெயர்ந்த இலங்கைப் பிரஜைகள் தங்களின் உழைப்பினூடாக ஈட்டிய வருமானத்தை திருப்பி அனுப்புவதற்கு சட்ட ரீதியான வழி முறைகளை மாத்திரம் பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard Cabraal)கேட்டுக்கொண்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இகு குறித்த தகவலை குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலின் Twitter பதிவை பார்வையிட இங்கே சொடுக்குக சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடுவோரின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் எனவும் அஜித் நிவார்ட் Read More

Read more

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்த இலங்கை மத்திய வங்கி!!

623 அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற பொருட்களின் இறக்குமதிகளுக்காக 100% உத்தரவாத தொகையை இறக்குமதியாளர்கள் வைப்பிலிட வேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்று நடைப்பெற்ற மத்திய வங்கியின் நாணய சபைக் கூட்டத்தில், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதிகபடியான இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நிய செலாவணி வீத உறுதிப்பாட்டினையும், வெளிநாட்டு நாணய சந்தையின் திரவத்தன்மையினையும் பாதுகாப்பதே இதன் நோக்கம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன் கீழ், கைப்பேசிகள், மின்விசிறிகள், தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், புடவைகள் மற்றும் உதிரி Read More

Read more

வங்கிகளில் கடன்பெற்றவர்களுக்கான கடன் சலுகை நீடிப்பு!!

தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான கடன் சலுகையை இலங்கை மத்தியவங்கி நீடித்துள்ளது. இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரைஇந்த சலுகையை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் வங்கிகள் மற்றும் அனுமதி பெற்ற வணிக நிறுவனங்களுக்கு சுற்று நிருபத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கொவிட் பரவலினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய Read More

Read more

பாரிய சவால்களை சந்தித்துள்ள வங்கிகள்!!

இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்கு உள்ளாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வணிக வங்கி மற்றும் வர்த்தகம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்ற பிச் ரேட்டிங் (Fitch Ratings) என்ற அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்தத் தகவலை இன்று வெளியிட்டுள்ளது. அந்நிய செலாவணி சரிவை ஈடுசெய்வதற்காக இலங்கை மத்திய வங்கி ஊடாக அரசாங்கம் வெளியிட்டிருக்கின்ற பிணை, முறிகள் மற்றும் வட்டிவீதம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2020ஆம் வருட இறுதியில் இலங்கை வங்கிக் கட்டமைப்பிடம் இருந்த சொத்து Read More

Read more