சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன, நிதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரும் இராஜினாமா!!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். மஹிந்த ராஜபக்சவை தொடர்ந்து சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவி விலகியிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது நிதி அமைச்சர் அலி சப்ரியும் பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more

முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை, எதிர்காலத்தில் நான்காம்கட்ட தடுப்பூசி….. புதிய சுகாதார அமைச்சர்!!

எதிர்வரும் காலத்தில் கொவிட் – 19 நான்காம் கட்ட தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்படுவதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார்.   நேற்று புதிய சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின், செய்தியாளர்கள் மத்தியில் பேசும் போது அவர் இதனைக் கூறினார்.   இதேவேளை, நேற்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அவர் கூறியுள்ளார்.   எனினும், பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முக கவசம் Read More

Read more

கொரோனாவின் அடுத்த அவதாரம்(A30)….. இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இலங்கையும் – ஹேமந்த ஹேரத்!!

உலகில் பல நாடுகள் A 30 கொரோனா வைரஸ் திரிபு குறித்து  கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த திரிபை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே கொரோனா வைரஸின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து Read More

Read more

மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!!

சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மேலும் 5 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. ஶ்ரீலங்கன் விமான சேவையின் UL 869 விமானத்தினூடாக சீனாவிலிருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்போது, இலங்கைக்கான சீன தூதுவர், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஸ, பிரசன்ன ரணதுங்க மற்றும் D.V. சாணக்க ஆகியோர் விமான நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தனர். இலங்கைக்கு 2 மில்லியன் தடுப்பூசிகளை எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் வழங்கவுள்ளதாக சீன தூதுவர் தெரிவித்ததாக இராஜாங்க Read More

Read more