நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி!!
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி தற்போது நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 02 மில்லியன் மெட்ரிக் தொன் நிலக்கரி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் அன்ரூ நவமுனி குறிப்பிட்டுள்ளார். தென்னாபிரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்தே இவை கொண்டுவரப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை இந்த நிலக்கரி போதுமானதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனிடையே, இன்றைய தினம்(03/05/2022) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை Read More
Read more