பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தம்!!

மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை அரசாங்கத்தால் மருந்துகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால், கையிருப்பில் இருந்த மருந்துகள் தீர்ந்த நிலையில் மருந்து தட்டுப்பாடு ஏற்றப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவிடம் இருந்து பெற்ற கடனுதவியின் கீழ் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read more

கொழும்பு மாவட்ட மக்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 150,000 பேர் இதுவரை COVID-19 தடுப்பூசியை போடவில்லை என கொழும்புமாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் 557 கிராம அலுவலர் பிரிவுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். 30 முதல் 59 வயதிற்குட்பட்ட 99,373 பேர் தடுப்பூசியை ஏற்றவில்லை.அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்ட 46,600 முதியவர்கள் தடுப்பூசியை எடுக்கவில்லை. தடுப்பூசி போடப்படாத இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் Read More

Read more