அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் யாழ் இளைஞனுடையது….. முழுமையான விபரங்கள்!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட யாழ். இளைஞனின் சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(05/11/2023) மதியம் நண்பர்களுடன் இணைந்து வெளியில் சென்றிருந்ததாகவும் இந்தநிலையிலேயே இன்றையதினம்(06/11/2023) குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என குறிப்பிடப்படுகின்றது. முகத்திலும் உடலிலும் அடிகாயங்களுடன்….. வெள்ளவத்தையில் கரையொதுங்கிய சடலம்!!

Read more

விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்து….. தானும் தீயில் குதித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!!

வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று(02/09/2023) பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். 33 வயதான இந்த எகிப்திய சுற்றுலாப் பயணி சுமார் மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும் ஒரு மாத காலத்துக்கான சுற்றுலா விடுதிக்கு Read More

Read more

காவல்துறை காவலில் இருந்த ராஜன் ராஜகுமாரியின் மரணம்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

வெலிக்கடையில் காவல்துறை காவலில் வைத்து உயிரிழந்ததாக கூறப்படும் ராஜன் ராஜகுமாரியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (25/08/2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுலுவல இந்த உத்தபிறப்பித்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையின் தீர்ப்பை வழங்கும் போதே மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Read more

கனரக வாகனத்துடன் மோதிய புகையிரதம்….. பலத்த சேதங்களுடன் சுக்குநூறாகின இரண்டும்!!

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீரிகம வில்வத்த பகுதியில் கனரக வாகனமொன்றுடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று(09/08/2023) காலை இடம்பெற்றுள்ளது. புகையிரதத்தில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் புகையிரதம் சமிக்ஞை, மின்கம்பங்கள் மற்றும் புகையிரத கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதாக என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த விபத்தால், புகையிரதத்தின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் Read More

Read more

கொழும்பின் பிரபல வைத்தியசாலையில் சிறுவனின் மரணம்….. முழுமையான விபரங்கள்!!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பிலும், மருத்துவர்களின் செயற்பாடு தொடர்பிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கின்றன. சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான ஹம்தி எனும் சிறுவன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுநீர் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அச்சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, Read More

Read more

வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. 21 படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!!

தனியார் பேருந்து ஒன்று சற்று முன்னர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதி காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more

மீண்டும் ஆரம்பமானது….. கொழும்பு – யாழ் .புகையிரத சேவை!!

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை இன்று(15/07/2023) மீள செயற்பட ஆரம்பித்துள்ளது. அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணத்துக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது. மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி Read More

Read more

17 வயதான சிறுமி மாயம்….. உதவி கூறும் உறவுகள்!!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் 17 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளனர். தனது வீட்டிலிருந்து வெளியில் வந்த சமயம் சென்ற குறித்த சிறுமியே காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட பகுதியிலிருந்து மாளிகாவத்தை செல்லும் வழியிலேயே சிறுமி காணாமல் போயுள்ளார். காணாமல்போன சிறுமி தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் (0773715446 –0761611667) என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more

நான்கு பெரிய வாகனங்கள் மோதி பாரிய விபத்து….. கவலைக்கிடமாகவுள்ளது 5 பேரின் நிலைமை!!

கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் இன்று (26/06/2023) காலை இடம்பெற்ற விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். புஸ்ஸல்லா பயிற்சி நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்து வழுக்கிச் சென்று சொகுசு பேருந்துடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. சொகுசுப் பேருந்து முன்னோக்கி நகரந்தமையினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் வான் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக…… வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல்!!

மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் பாடசாலை சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடிய வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது. அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் நிலை அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் மருத்துவர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள் Read More

Read more