பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் USD உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டம்!!

பெறுமதியான சில அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்கி 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக சம்பாதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தளை சர்வதேச விமான நிலையம் மற்றும் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் என்பனவும் அவற்றில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு விடப்படவுள்ளன. அதனடிப்படையில், கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் டொலர்களுக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் டொலர்களுக்கும், இரத்மலானை விமான நிலையத்தை Read More

Read more

டொலர் நெருக்கடியால் நடுக்கடலில் தவங்கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!!

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல்களில் இருந்து தரையிறக்கும் பணி இடம்பெறாது என ஐக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நேரத்தில் டொலர்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் கப்பல்களுக்கான தாமதக் கட்டணமாக அதிகளவு டொலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித(Ananda Palitha) தெரிவித்துள்ளார். டீசல் கப்பல் ஒன்று 11 நாட்களில் வந்துள்ளதாகவும் கடந்த 28ஆம் திகதி வந்த பெற்றோல் கப்பலில் இருந்து இதுவரை தரையிறக்கம் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read More

Read more

டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 1000 கொள்கலன்களில் உருளைக்கிழங்கு, பருப்பு, வெங்காயம், சீனி, நெத்தலி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் துறைமுகத்தில் தேங்கி கிடப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ளதுறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு இதுவும் காரணமாக அமைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha)தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவைக் Read More

Read more

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் கொள்கலன்கள்….. காரணம் டொலர் தட்டுப்பாடு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக சுமார் 100 சீனி கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது சந்தையில் சீனிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால், சீனி இருப்பு உள்ள கடைகளில் கூட, ஒரு கிலோ, 155 முதல், 160 ரூபாய் வரை, கட்டுப்பாட்டு விலைக்கு மேல் விற்கப்படுகிறது. சீனி கொள்கலன்கள் மாத்திரமன்றி ஆயிரக்கணக்கான மெற்றிக் தொன் பொருட்களை உள்ளடக்கிய சுமார் 500 கொள்கலன்கள் தற்போது துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாகவும் இது ஒரு Read More

Read more

கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கிய 400 சொகுசு வாகனங்கள்!!

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள போதிலும் சுமார் 400 சொகுசு வாகனங்கள் கொழும்பு துறைமுகத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தரையிறங்கிய குறித்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுமா இல்லையா என இலங்கை சுங்க திணைக்களம் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்த நிலையில் இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் தற்போது அந்த வாகனங்கள் சட்டத்திற்கு முரணாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் தனது Read More

Read more

X-PRESS PEARL: கொள்கலன்கள் கரை ஒதுங்கின!!

தீ விபத்துக்குள்ளான X-PRESS PEARL கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்துள்ள கொள்கலன்கள் மற்றும் சிதைவுகள் நீர்கொழும்பு மற்றும் அதனை அண்மித்த கடற்கரையில் ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கியுள்ள கொள்கலன்களில் அபாயகரமாக பொருட்கள் காணப்படக்கூடும் என கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பொருட்களுக்கு அருகில் செல்லல் மற்றும் அவற்றை தொடுவதை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். X-PRESS PEARL கப்பலில் பரவிய தீ, கப்பல் முழுதும் பரவியுள்ளதாக கடல் மாசுறுல் தடுப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி Read More

Read more

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் மீண்டும் வெடிப்பு! உடன் விரைந்த ஸ்ரீலங்கா கடற்படை!!

மே 21 அன்று கொழும்பு துறைமுகப் பகுதியில் தீப்பிடித்த ஒரு கொள்கலன் கப்பலில் இருந்து 25 பேர் கொண்ட குழு மீட்கப்பட்டுள்ளது. எனினும் இன்று கப்பலில் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து, அதில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக காயமடைந்த இருவர் தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் மே 21 அன்று ஏற்பட்ட தீ Read More

Read more

X-Press Pearl சரக்கு கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்!!

கொழும்பு துறைமுகத்திற்கு வௌியில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலொன்றில் பரவிய தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடற்படையினரும் துறைமுக அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். X-Press Pearl என்ற சரக்கு கப்பலொன்றிலேயே தீ பரவியுள்ளது. கொழும்பு துறைமுகத்திலிருந்து வட மேற்காக 9.5 கடல் மைல் தொலைவில் குறித்த கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார். இரசாயனப் பொருட்களை கொண்டு சென்ற போதே கப்பலில் தீ பரவியதாக அவர் கூறினார். Read More

Read more