தீப்பற்றிய கப்பல் கப்டன் உட்பட மூவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!!!!
கொழும்பிற்கு அண்மித்த கடற்பரப்பில் தீபரவிய எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் கப்டன், பிரதான பொறியியலாளர் மற்றும் பிரதி பிரதான பொறியியலாளர் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேவேளை, கப்பலில் பரவிய தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் வருகை தந்த மீட்புப் பணியாளர்கள், கப்பலுக்குள் பிரவேசித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
Read more