உடனடியாக மின்தகன இடங்களை அமைக்க சாத்தியமில்லை – யாழ் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்!!

புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில்ல அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திலே சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ் மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது. முதலில் தகனம் செய்யும் போது ஒரு நாளில் மூன்று உடல்கள் தகனம்செய்யப்பட்டன. பின்னர் அது நான்கு, ஐந்து Read More

Read more

இடுப்பு வலி பரிசோதனை செய்ய சென்ற இளைஞன் – மருத்துவருக்கு முன்பாக விழுந்து மரணம்… காரணம் Covid-19!!

இளைஞன் ஒருவன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ளச் சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த இளைஞனுக்கு 25 வயது என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

குழந்தை பிறந்து 6 நாட்களின் பின் கொரோனாவால் உயிரிழந்த பெண்!!

கம்பஹா மருத்துவமனையில் குழந்தையை பிரசவித்த 33 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மகப்பேறுக்காக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் குழந்தை பிரசவித்து 6 நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். இதில் தெல்கொட பகுதியைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளார். மேலும், பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read more

இலங்கையில் கொரோனா மரணங்கள் உச்சம் தொட காரணம் என்ன??

கொவிட் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் பொது சுழற்சியை 80% முதல் 90% வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொவிட் 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read more

மன்னாரில் கொவிட் மரணம் அதிகரிப்பு – வைத்தியர் ரி.வினோதன் தெரிவிப்பு!!

மன்னாரில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த 9ஆம் திகதி, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கீரி பகுதியைச் சேர்ந்த( 77 வயதுடைய) வயோதிபர் ஒருவர், நிமோனியா காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலன் இன்றி, Read More

Read more

அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் மரணங்கள் அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்!!

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அடுத்த 14 நாட்களுக்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை மிக சடுதியாக அதிகரிக்கும். இதனை சுகாதார கட்டமைப்பால் தாங்க Read More

Read more

COVID: உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது, இன்று 3,051 பேருக்கு தொற்று!!

இலங்கையில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான COVID தொற்றாளர்கள் இன்று (19) பதிவாகியுள்ளனர். இன்று இதுவரை 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் இதுவரை COVID தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,000-ஐ கடந்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்றிரவு 34 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளது.

Read more

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள்!!

மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று (12) உறுதி செய்யப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 868 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார். வவுனியா, வந்துரம்ப, இமதுவ, வலஸ்முல்ல, மத்துகம, மெல்சிறிபுர, குருநாகல், அலவ்வ (இருவர்), மொரொன்துடுவ, ஓமல்பே, எம்பிலிபிட்டி, ஹல்தடுவத்த, கந்தெகெதர, பசறை, கொழும்பு – 05, தல்கஸ்வல மற்றும் பேருவல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Read more

கொரோனா தொற்றால் மேலும் ஐவர் மரணம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது. இன்று – சிலாபத்தில் 72 வயதான ஆண் ஒருவரும், மக்கொனையில் 86 வயதான பெண் ஒருவரும், கொழும்பு 15இல் 76 வயதான ஆண் ஒருவரும், மஹரகமவில் 50 வயதான ஆண் ஒருவரும், வத்துபிட்டிவல பகுதியில் 86 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு Read More

Read more