நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 திரிபுகள் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளில் ஒமிக்ரோன் வைரசின் புதிய மாறுபாடு வகையான பி.ஏ.2 வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அது வேகமாக பரவும் தன்மை கொண்டது என பிரான்ஸ் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஒமிக்ரோன் வகை கொரோனா வைரசின் துணை திரிபுகள், பி.ஏ.1, பி.ஏ.2 மற்றும் பி.ஏ.3 என உலக சுகாதார அமைப்பு வரிசைப்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் 426 பேருக்கு பி.ஏ.2 வகை ஒமிக்ரோன் வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், டென்மார்க், நோர்வே, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் அவ்வகை மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More

Read more

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பவானிக்கு ஒட்டிக்கொண்ட பீடை!!

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம், மூன்றாவது இடத்தை பிடித்து ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தாலும், பிக்பாஸ் அல்டிமேட் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும், போட்டியாளர்கள் அனைவரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து வரும் நிலையில் பாவனி, தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். அதில், “என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும்… நான் லேசான அறிகுறிகளுடன் Read More

Read more

173 கொரோனா நோயாளிகளுடன் இத்தாலியிலிருந்து வந்த விமானம்!!

இத்தாலி நாட்டிலிருந்து பஞ்சாபுக்கு ஒரே விமானத்தில் வந்த 173 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் மேலதிக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து அவர்களுக்கு ஒமிக்ரோன் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவரும். தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவரவர் சொந்த ஊரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Read more

கடந்த வாரத்தில் 71% அதிகரிப்பு – அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர்….. WHO!!

ஒமிக்ரான் திரிபு லேசான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்று விவரிப்பதற்கு எதிராக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக நாடுகளில் ஒமிக்ரான் திரிபு மக்களை கொன்று வருகிறது எனவும் கூறியுள்ளது. கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும் குறைந்த அளவிலேயே ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீவிரமான உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், ஒமிக்ரான் திரிபு பரவும் வேகத்தால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சுகாதார அமைப்புகள் கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளதாக Read More

Read more

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் மரணம் பதிவு!!

இந்தியாவில் ஒமைக்ரோன் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரோன் தொற்றால் ஏற்பட்ட முதலாவது மரணம் இது எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரையில் 2,135 ஒமைக்ரோன்  தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட தினமும் அதிகமான தொற்றாளர்கள்….. உபுல் ரோஹன!!

கொவிட் தொற்று நோய் நிலைமை சம்பந்தமாக சுகாதார அமைச்சு தினமும் வெளியிடும் புள்ளிவிபரங்களை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். புள்ளிவிபரங்களில் அறிவிக்கப்படுவதை விட அதிகமான தொற்றாளர்கள் தினமும் சமூகத்திற்குள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த தகவல்கள் தேசிய புள்ளிவிபரங்களுக்கு வரும் போது திரிபுப்படுத்தும் நிலைமையை காணக் கூடியதாக இருக்கின்றது. இப்படி தொற்று நோய் நிலைமையை கட்டுப்படுத்துவது மிகவும் ஆபத்தாக மாறலாம். Read More

Read more

‘ஒமிக்ரோன்’ தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும்….. ஹேமந்த ஹேரத்!!

இலங்கையில் “ஒமிக்ரோன்” பரவல் ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார். இந்த புதிய தொற்று எந்த நேரத்திலும் நாட்டுக்குள் பிரவேசிக்க ஏதுக்கள் உள்ளன. இந்தநிலையில், நாட்டுக்குள் இந்த தொற்று வருவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும், தம்மால் தொற்று ஏற்படுவதை தாமதிக்க மாத்திரமே முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more

புதிதாக விருத்தியடைந்த ஒமிக்ரோன் வைரஸின் புகைப்படம் வெளியிட்ட இத்தாலி விஞ்ஞானிகள்!!

புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரோன் கொரோனா வைரஸின் புகைப்படத்தை உலகில் முதன்முதலாக இத்தாலி விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். ரோமில் உள்ள Bambino Gesù குழந்தைகள் மருத்துவமனையின் விஞ்ஞானிகள் உலகை அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸின் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். வைரஸின் உருவத்தில் ஒட்டியிருக்கும் மனிதர்களின் செல்களுக்குள் நுழைய தேவைப்படும் புரதத்தில், டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸில் அதிக பிறழ்வுகள் உள்ளதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இவை டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானவை என கருத Read More

Read more

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது புதிய கொரோனா வைரஸ் திரிபு….. சுகாதார அமைச்சு அதிரடி முடிவு!!

தென்னாபிரிக்காவில் அடையாளம் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் திரிபு காரணமாக, சில நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கு சுகாதார அமைச்சு தடை விதித்க்க தீர்மானித்துள்ள. இதற்கமைய , தென்னாபிரிக்கா, அங்கோலா, பொட்ஸ்வானா, மொசாம்பிக், லெசோதோ, சிம்பாப்வே, சுவிட்ஸர்லாந்து மற்றும் நமீபியா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்த தடை பொருந்தும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவு முதல் குறித்த நாட்டவர்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்க Read More

Read more