கொரோனாத் தொற்றின் தாக்கம் தொடர்பாக WHO வெளியிடட முக்கிய அறிவிப்பு!!

கொரோனாத் தொற்றின் தாக்கம் குறைவடைந்து விட்டதாக கூறப்படுவது போலியான கருத்தாகும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.   உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போது பல்வேறு போலியான தகவல்கள் பரவி வருவதாகவும் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Read more

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

கரவெட்டி கோட்டத்திலுள்ள பாடசாலைகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உறுதி….. நேற்றும் 07 பேர்!!

வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பெண்கள் பாடசாலை மாணவி ஒருவருக்கும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து 3ஆசிரியர்களும் இரு மாணவிகளும் உட்பட 7 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி கோட்டத்தில் இயங்கும் பெண்கள் பாடசாலையில் மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவருடன் தொடுகையை மேற்கொண்டு முதலுதவி வழங்கிய ஆசிரியர்கள் இருவரும், இரு மாணவிகளும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், கரவெட்டி  கோட்டத்தில் இயங்கும் ஆண்கள் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் ஒருவருக்கு Read More

Read more

12 மாணவர்களுக்கு தலை மன்னாரில் கொரோனா தொற்று!!

பனிக் குடத்துடன் வெளிவந்த குழந்தையின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. குழந்தை பிறப்பு என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் மறு பிறவி போல. கர்ப்பகாலம் என்பது பெண்களின் வாழ்நாளில் மிகவும் முக்கியமான கால கட்டம். இந்த சமயத்தில் கர்ப்பிணி பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பலர், அவர்களின் கர்ப்ப காலத்தின் இறுதி காலகட்டத்தில் அல்லது பிரசவம் நிகழ்வதற்கு முன்பாக பனிக்குடம் உடைந்து விட்டது அல்லது பனிக்குட நீர் வெளிவந்து விட்டது என்று Read More

Read more

“ஒமிக்ரோன்” இலகுவில்எந்த இரத்த வகையை தொற்றும்…… ஆய்வு முடிவுகள் வெளியானது!!

டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனை இரத்த வகைகளை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதிப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டது. இதில், AB மற்றும் B இரத்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்றும் வாய்ப்பு அதிகம் என தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி முதல் ஒக்டோபர் 4ம் திகதிவரை தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2,586 கொரோனா நோயாளிகளை வைத்து இந்த ஆய்வை ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனை நடத்தியது. இந்த ஆய்வில், B இரத்த பிரிவை Read More

Read more

கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும்!!

பண்டிகை காலப்பகுதியில் கோவிட் வைரஸ் தொற்று பரவும் வகையில் மக்கள் செயற்பட்டால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நேரிடும் என சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய காலப்பகுதியில் உள்ள சுகாதார வழிக்காட்டல்கள் இதற்கு முன்னர் காணப்பட்டதனை விடவும் தளர்த்தப்பட்டுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில், சிறு குழந்தை முதல் அனைவருக்கும் சமூக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பண்டிகை காலத்துடன் தொடர்புடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Read more

மீண்டும் ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் கொரோனா…… WHO அதிருப்தி!!

கொரோனா வைரஸின் புதிய அலை ஐரோப்பாவில் மிக வேகமாக பரவிவருகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் புதிய அலை மிகவும் வேகமாக பரவிவருகின்றது. ஏற்கனவே ஒஸ்ரியா அரசாங்கம் நாட்டை முடக்கியுள்ளது. அதேபோல், நெதர்லாந்து மூன்று வாரத்திற்கு பகுதியளவில் நாட்டை முடக்கியுள்ளது. இந்த நிலையில் ஜேர்மனியில் தொடர்ந்தும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பிராந்தியத்தில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் Read More

Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை சற்று குறைவடைந்துள்ளது…. அரசாங்க அதிபர் க. மகேசன்!!

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது . யாழில் நேற்று 213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More

Read more

திருகோணமலைலையில் 147 சிறுவர்கள், 148 கர்ப்பிணித் தாய்மார்கள் பாதிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் 147 சிறுவர்களும் 148 கர்ப்பிணித்தாய்மார்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால்  (31) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட நாளாந்த உத்தியோகபூர்வ அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை 4,631 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 99 பேர் மரணித்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரைக்கும் 9,815 பேர் தொற்றுக்கு Read More

Read more