ஒமைக்ரோனிற்கு அமெரிக்காவில் முதல் பலி!!

அமெரிக்காவில், ஒமைக்ரோன் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் ஒமைக்ரோன் பாதிப்பினால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கவுன்டி நீதிபதி லீனா ஹிடால்கோ தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒமைக்ரோன் தொற்றால் பலியான முதல் உள்ளூர்வாசி. தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். முன்னரே தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் Read More

Read more

பெண் குழந்தையை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் Covid-19 தொற்றால் மரணம்…. யாழ். போதனா மருத்துவமனையில் நடந்த துயரம்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். “கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் Read More

Read more

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில்…. குவிந்துள்ள கொரோனா சடலங்கள் – வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதனின் கருத்து!!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வே.கமலநாதன் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்ற போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் , எமது வைத்திய சாலையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதி கொரோனா நோயாளர் விடுதி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 556 Read More

Read more

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை சற்று குறைவடைந்துள்ளது…. அரசாங்க அதிபர் க. மகேசன்!!

யாழ் மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாளாந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமை சற்று குறைவடைந்து காணப்படுகின்றது . யாழில் நேற்று 213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More

Read more

உடனடியாக மின்தகன இடங்களை அமைக்க சாத்தியமில்லை – யாழ் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்!!

புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில்ல அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திலே சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ் மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது. முதலில் தகனம் செய்யும் போது ஒரு நாளில் மூன்று உடல்கள் தகனம்செய்யப்பட்டன. பின்னர் அது நான்கு, ஐந்து Read More

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more