நெருக்கடியிலும் மீண்டும் பொதுமக்களுக்கான அடுத்த கட்ட தடுப்பூசி ஆரம்பம்!!

நாடளாவிய ரீதியில் மீண்டும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இலங்கை மக்களுக்கு இன்று முதல் 4ஆவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கமைய முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நான்காம் கட்ட தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் கொரோனா தொடர்பான நிபுணர் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே, இன்றைய தினம் முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி Read More

Read more

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

கர்ப்பிணித் தாய்மார்கள் இயலுமானவரை விரைவாக பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 500 கர்ப்பிணிப் பெண்கள் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சில்வா (Dr. Chitramali de Silva) தெரிவித்துள்ளார். ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். சன நெரிசல் அதிகமுள்ள இடங்கள் மற்றும் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Read more

குடிமக்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசியை பெறுவதை கட்டாயமாக்கிய ஐரோப்பிய நாடு!!

ஒஸ்ரியா நாட்டின்  பிரஜைகள் அனைவரும் கொவிட் தொடர்பான சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாடுகள் ஏற்கனவே முதியவர்கள் அல்லது சுகாதார ஊழியர்கள் கொவிட் தடுப்பூயை பெற்றுக்கொள்வது கட்டாயம் என அறிவித்துள்ளன. எனினும், எந்த ஐரோப்பிய நாடும் தமது நாட்டுக்கு குடிமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வது கட்டாயம் என்ற சட்டத்தை கொண்டு வரவில்லை.   இந்நிலையிலேயே, ஒஸ்ரியாவில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும்,v Read More

Read more

ஊரடங்கு தொடர்பில் சற்றுமுன் வெளிவந்த தகவல்!!

நாட்டை முடக்காமல் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடிந்தால் அது நமது மிகப்பெரிய சாதனையாக இருக்கும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.   கொரோனா தடுப்பூசி அட்டையை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பணியாற்றி வருகிறோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மரபணு பரிசோதனையானது, வைரஸின் புதிய திரிபுகளை அடையாளம் காண்பதற்கு Read More

Read more

மூன்றாவது டோஸாக Pfizer பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியாக பைசர் அல்லது பூஸ்டர் பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா (Malkanthi Kalhena) தெரிவித்துள்ளார். தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பைசர் தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் போது, கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் Read More

Read more