வடமராட்சி கிழக்கில் மின்னல் தாக்கி இறந்தவருக்கும் Covid-19 தொற்று உறுதி!!

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இச்சம்பவம் நேற்று முன்தினம் வெற்றிலைக்கேணி கோரியடி கடற்கரையில் உள்ள வாடியில் நின்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் போது , இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜோன் தோமசன் குயின்ரன் சுதர்சன் (வயது – 35) என்பவர் உயிரிழந்திருந்துள்ளார். அவருடைய சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more