இரண்டு டோஸ்களையும் பெற்ற மாணவர்களே பல்கலைக்கழகங்களுக்குச் செல்லலாம்….. பேராசிரியர் சம்பத் அமரதுங்க!!
கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்கலைக்கழகங்களின் கல்விச் செயற்பாடுகளை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மீளவும் ஆரம்பிக்க துணைவேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் கூறியுள்ளார். அதற்கமைய இன்று(26) முதல் தாம் விரும்பும் எந்த ஒரு திகதியிலும் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பதற்கு உப வேந்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இரண்டு டோஸ்களையும் பெற்ற மாணவர்களுக்கே பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க Read More
Read more