இலங்கையில் 7ஆக அதிகரித்த ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!!

நாட்டில் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சூடானில் இருந்து வந்த இருவரும், தன்சானியாவில் இருந்து வந்த ஒருவருமாக 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்கனவே, 4 பேர் ஒமைக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more

ஆரம்ப பிரிவு பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று…… மஹிந்த ஜயசிங்க!!

ஆரம்ப பிரிவு  பாடசாலை மாணவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் (Mahinda Jayasinghe) குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த ஆரம்பப் பிரிவு பாடசாலை மாணவர்கள் மத்தியில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என தெரிவித்துள்ளார். தரம் 6 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு இன்னமும் அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், மாணவர்களும் ஆசிரியர்களும் பலவந்தமான அடிப்படையில் அதிபர்களினால் பாடசாலைகளுக்கு Read More

Read more

அரச மருத்துவ அதிகாரிகள் பாடசாலை சிற்றுண்டிச்சாலை தொடர்பில் வெளிவந்த சுற்றறிக்கை!!

பாடசாலை சிற்றுண்டிச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர்களிடையே தொற்றா நோய்களின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவித்துள்ளது. எனினும், பல சிற்றுண்டிச்சாலைகள் அந்த சுற்றறிக்கைக்கு அமைய செயற்படுவதில்லையென வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது , மாணவர்களின் இணை பாடவிதான Read More

Read more

பொது போக்குவரத்து சேவையை நிறுத்துங்கள்…. வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத்!!

கொவிட் -19 தொற்றை கணிசமாக கட்டுப்படுத்தும் வரை பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படுவதை மேலும் ஒத்திவைக்க வேண்டும் என்று சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம்,விசேட (Dr. Hemantha Herath) தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது கொவிட் தொற்று மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் நாங்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Read more