அச்சுறுத்துகிறது கொரோனா….. மேலும் நால்வர் உயிரிழப்பு!!

இலங்கையில் நேற்றையதினம் மேலும் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அவர்களுடன், இலங்கையில் பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16548 ஆகும். இன்று புதிதாக இனங்காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 ஆகவும் அவர்களுடன் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 665,248 ஆகவும் அதிகரித்துள்ளது. சுகாதாரத் திணைக்களம் எச்சரிக்கை   கடந்த வாரம் முதல் இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

Read more

நேற்றைய தினம் மட்டும் நாட்டில் 30 கொவிட் மரணங்கள்!!

இலங்கையில் மேலும் 30 கொவிட் மரணங்கள் நேற்றைய தினம்(14) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.   நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,874 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 304 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 595,3649 ஆக அதிகரித்துள்ளது.

Read more

காலமானார் பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர்!!

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்(வயது 72). கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே Read More

Read more

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்….. காரணம் கொவிட்-19

கொவிட்-19 தொற்றுக்குள்ளான கர்ப்பிணிப் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்பவரே உயிரிழந்தார். கடந்த முதலாம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி நேற்று (12)இரவு உயிரிழந்தார். இறப்பு விசாரணையை யாழ்ப்பாண போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இன்றையதினம் மேற்கொண்டார். சடலத்தை Read More

Read more

உடனடியாக மின்தகன இடங்களை அமைக்க சாத்தியமில்லை – யாழ் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்!!

புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில்ல அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்திலே சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ் மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது. முதலில் தகனம் செய்யும் போது ஒரு நாளில் மூன்று உடல்கள் தகனம்செய்யப்பட்டன. பின்னர் அது நான்கு, ஐந்து Read More

Read more

இடுப்பு வலி பரிசோதனை செய்ய சென்ற இளைஞன் – மருத்துவருக்கு முன்பாக விழுந்து மரணம்… காரணம் Covid-19!!

இளைஞன் ஒருவன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ளச் சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த இளைஞனுக்கு 25 வயது என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

இரவு, பகலாக எரியும் சடலங்கள்- நோயாளிகளின் உடலில் என்ன நடக்கிறது? மருத்துவரின் அதிரவைக்கும் தகவல்கள்

தமிழ்நாட்டில் கொரோனா முதல் அலையைவிட இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்நோயால் தினசரி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது. முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் என்ன வித்தியாசம்? எவ்விதமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது?  என்பது பற்றி விளக்குகிறார் மருத்துவர். தீவிரமடைந்த கொரோனா “இந்த முறை கொரோனா வைரஸின் திடீர் மாற்றமடைந்த வடிவங்கள் பரவத் துவங்கியிருக்கின்றன. இப்படிப் புதிதாக மாற்றமடைந்த வைரஸ்களைப் பொறுத்தவரை, அவை மூக்கில், அதாவது மூச்சுக் குழாயின் துவக்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. கடந்த முறையைப் போல் Read More

Read more

கொரோனா சிகிச்சை பெற்ற இளம்நடிகர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்கள்

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கன்னட இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத், இவர் கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா போன்ற படங்களை தயாரித்து நடித்ததன் மூலம் பிரபலமானவர். மேலும், ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்தப் படத்தை வருகிற ஜூன் 22-ந் தேதி தனது பிறந்த நாளன்று வெளியிடவும் திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், மஞ்சுநாத்துக்கு, கடந்த வாரம் திடீர் உடல் Read More

Read more

யாழ் – சாவகச்சேரி வாசி கொரோனாவால் பலி

யாழ். சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் கொவிட் – 19 நோயால் உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லேரியா தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று உயிரிழந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார். குறித்த பெண்ணின் சடலம் சுகாதார நடைமுறைகளின் கீழ் முல்லேரியாவிலேயே மின்தகனம் செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more