அடுத்தவாரம் முதல் மாணவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி

16 தொடக்கம் 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண (Prof. Channa Jayasumana) தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடு மிகவும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் செயற்பாடு வெற்றி பெற்றுள்ளது. சில நாட்களில் மூன்று மாதங்கள் முடிந்த பிறகு 16 Read More

Read more

இந்தியா-இங்கிலாந்து இணைந்து தயாரித்த தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்!!

இங்கிலாந்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது. இதே தடுப்பூசி இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவது வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Read more

மூன்றாவது டோஸாக Pfizer பெற்றவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக மூன்றாவது தடுப்பூசியாக பைசர் அல்லது பூஸ்டர் பெற்ற பிறகு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளை பற்றிக் கவலைப்பட தேவையில்லை என சிறப்பு வைத்தியர் மல்காந்தி கல்ஹேனா (Malkanthi Kalhena) தெரிவித்துள்ளார். தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பைசர் தடுப்பூசியின் மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் போது, கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும். உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் Read More

Read more

இலங்கை சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு Booster தடுப்பூசிகள்!!

நாட்டின் சனத்தொகையில் 67 சத வீதமானோருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து பூஸ்டர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கான முற்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். நாட்டில் இதுவரை ஒரு கோடியே 37 இலட்சத்து 49 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கோடியே Read More

Read more

நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கப்படும்!!

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது ஐ.நா. பொதுச் செயலாளரிடம் ஜனாதிபதி கோட்டாபய, நவம்பர் மாதத்திற்கு முன்னர் 15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் முழுமையாக தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Read more

கொவிட் தடுப்பூசி அட்டை இன்றி பயணம் செய்ய முடியாதா? வெளியானது உண்மைத் தகவல்

கொவிட் தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் மன்னார் மற்றும் பலாங்கொட பகுதி நகரங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகி இருந்த போதிலும் அவ்வாறான எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கொவிட் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட Read More

Read more

இரு Dose தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று முதல் தொழிலுக்கு செல்ல முடியாது…. மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன்!!

மன்னாரில் பொலிஸ் சோதனை சாவடிகளிலும், மீன்பிடி துறைமுகங்களிலும் கொரோனா தடுப்பூசி அட்டைகளை சோதனையிடுவதற்கு இன்று முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசியை பெற்றிருப்பது மன்னாரில் இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.   அதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், இரு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, பொது இடங்களில் நடமாடுவதற்கும், மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ். வினோதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே Read More

Read more

20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் சிரமம்….. உபுல் ரோஹண!!

இலங்கையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வாரம் நாட்டின் சில பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வியை தொடரவுள்ள மாணவர்கள் பலர் எழுத்துபூர்வ அல்லது பிற ஆவணங்களுடன் விரும்பிய தடுப்பூசியை பெற முயற்சிப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண Read More

Read more

வடமாகாணத்தில் இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்…. வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன்!!

வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதுவரை எந்தவொரு தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளவில்லை என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் A.கேதீஸ்வரன் தெரிவித்தார். எனவே , இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரையும் உடனடியாக சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாணத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதமானவர்கள் முதலாம் கட்ட தடுப்பூசியையும் 62 சதவீதமானவர்கள் 2 ஆம் கட்ட தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளதாக வைத்தியர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்தார். எந்தவொரு தடுப்பூசி மருந்தையும் பெற்றுக்கொள்ளாதவர்களே வட Read More

Read more

தடுப்பூசி ஏற்றியவர்களை விட,ஏற்றாதவர்கள் 11 மடங்கு மருத்துவமனையில் அனுமதி…. CDC பணிப்பாளர் Rochelle Walensky இன் கருத்து!!

தடுப்பூசி ஏற்றியவர்களை விட தடுப்பூசி ஏற்றாதவர்கள் 11 மடங்கு அதிகமாக கொவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக சிடிசி நிலையப் பணிப்பாளர் ரோஷெல் வாலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடுமையான நோய் அல்லது இறப்புக்கு எதிராக கொவிட் -19 தடுப்பூசிகளின் செயல்திறனை தெளிவாகக் காட்டும் ஒரு புதிய ஆய்வை அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் வெளியிட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கும் மேலாக கொவிட் 19 தொற்றினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களை ஆய்வு செய்ததில் இந்த Read More

Read more