TikTok மோதல் காரணமாக இளைஞர் கொலை!!
டிக்டொக் (TIK TOK) சமூக ஊடகத்தினால் ஏற்பட்ட மோதல் ஒன்று காரணமாக இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 17 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு − கிரான்பாஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் டிக்டொக் சமூக ஊடகம் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read more