இடுப்பு வலி பரிசோதனை செய்ய சென்ற இளைஞன் – மருத்துவருக்கு முன்பாக விழுந்து மரணம்… காரணம் Covid-19!!

இளைஞன் ஒருவன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. கண்டி குண்டசாலை மஹமெவ்னா என்ற பிரதேசத்தில் உள்ள கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு இடுப்பு வலி காரணமாக பரிசோதனை செய்துகொள்ளச் சென்ற இளைஞன் மருத்துவருக்கு முன்பாகவே விழுந்து உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த இளைஞனுக்கு 25 வயது என தெரிவிக்கப்படுகிறது. பின்னர் நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் கண்டி கட்டுகஸ்தோட்டையை சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.

Read more

பெற்றோரை காவு கொண்டது கொரோனா – நிர்க்கதியான ஐந்து வயது சிறுமி!!

கிரிபத்கொட பகுதியில் தாயும் தந்தையும் தமது ஐந்து வயது மகளை தனியாக விட்டுவிட்டு கொரோனாவால் உயிரிழந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் தனஞ்செய அனுருத்தா, 36, மற்றும் அவரது மனைவி 27 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனஞ்செய கடந்த 22 ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மற்றும் அவரது மனைவி நேற்று (25 ம் திகதி) காலை காலமானார். அவர்களின் ஐந்து வயது மகள் தனது அன்புக்குரிய தாய் மற்றும் தந்தையை இழந்த நிலையில் Read More

Read more

இலங்கையில் கொரோனா மரணங்கள் உச்சம் தொட காரணம் என்ன??

கொவிட் பரவுவதை கட்டுப்படுத்த சமூகத்தில் பொது சுழற்சியை 80% முதல் 90% வரை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், நாடு கொவிட் 4 ஆம் இடர் நிலையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது. நாட்டின் தடுப்பூசி செயல்முறை, அறிவியல் முறையின் எல்லைக்கு வெளியே செயற்படுத்தப்பட்டமையே, மரண எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு காரணம் என்று சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Read more

அதிகரிக்கும் கொரோனா – முக்கிய அரச நிறுவனமொன்று வெளியிட்ட அறிவிப்பு!!

தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே தபால் நிலையங்கள் மற்றும் உப அஞ்சலகங்கள் திறந்திருக்கும். தற்போதைய கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், ஈஎம்எஸ் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தால் நிகழ்த்தப்படும் சர்வதேச கூரியர் சேவை, ஸ்பீட் போஸ்ட் சேவை, வெளிநாட்டு பொதிகள் சேவை மற்றும் ஸ்டாம்ப் சீலிங் மெஷின் பிரிவு Read More

Read more

அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் மரணங்கள் அதிகரிக்கும் – பொது சுகாதார பரிசோதகர்கள்!!

இலங்கையில் அடுத்த இரண்டு வாரங்கள் என்ன செய்தாலும் கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களில் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர். கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நோயாளிகள் அதிகரிப்பதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். அடுத்த 14 நாட்களுக்கு இந்த நிலைமையை கட்டுப்படுத்த நாம் என்ன செய்தாலும் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை மிக சடுதியாக அதிகரிக்கும். இதனை சுகாதார கட்டமைப்பால் தாங்க Read More

Read more