வீட்டிலிருந்து வெளியே செல்வோருக்கு – முக்கிய அறிவிப்பு

இதுவரையில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்கள், ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சரான விசேட வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு, கட்டான பகுதியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எந்த வகையான தடுப்பூசி என்று பார்த்துக்கொண்டிருக்காமல், அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் மையத்திற்கு சென்று, ஏதேனும் ஒரு தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதனால், வீட்டிலிருந்து வெளியேறுபவர்கள், மக்கள் கூடி இருந்தால், அந்த இடத்தில் தேநீர் அருந்தவோ அல்லது Read More

Read more

இதற்கு மேல் 2000/= வழங்க முடியாது -அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!!

அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், 2000 ரூபா தொகையை விட அதிகமாக வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஊரடங்கு உத்தரவின் போது வாழ்வாதாரத்தை இழக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதாக இல்லை Read More

Read more

ரஸ்யாவிலிருந்து கிடைத்த 15,000 Sputnik-V தடுப்பூசிகள் யாருக்கு செலுத்தப்படும்!!

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி 15,000 sputnik-V தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதுவரையில் 159,88 பேருக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அவர்களில் 25, 489 பேர் இரண்டாவது தடுப்பூசியை பெற்றுள்ளனர். இந்தநிலையில், இன்று கிடைக்கப்பெற்றுள்ள தடுப்பூசி தொகை கண்டி மாவட்டத்திற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருவர் மரணம்!!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றுஅதிகாலை அழைத்துச் செல்லப்பட்ட இளம் பெண் உட்பட்ட இருவர் வைத்தியசாலை வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் இருவருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் என்றும், மற்றையவர் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

Read more

பருத்தித்துறையில் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் பலருக்கு தொற்று உறுதி!!

பருத்தித்துறை – மந்திகை ஆதார மருத்துவமனைக்கு நேற்று வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்கு வருகை தந்தவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 32 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 45 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலேயே 32 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியவர்கள், இடைத்தங்கல் சிகிச்சை நிலையங்களில் அனுமதிக்கப்படவேண்டியவர்கள் மற்றும் வீடுகளில் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என பிரித்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.

Read more

நாட்டை 4 வாரங்களுக்கு முடக்க ஆலோசனை!!

நாட்டை #Ssதொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்கேனும் முழுமையாக முடக்கிவைக்க வேண்டும் என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் மக்களின் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துக்களும் சாதாரண நாட்களில்போன்றே இடம்பெறுவதாகவும் அந்தக்கட்சி தெரிவிக்கின்றது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். கொவிட் தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது Read More

Read more

அற்புத மருந்து “RREGN-COV2” இலங்கைக்குமா????

கொரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற உலகெங்கிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மருந்தான REGN-COV2 ஐ இலங்கை மருத்துவர்களும் தங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர். கொரோனா வகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த மருந்து கொரோனா இறப்புகளை குறைக்கலாம் என்றும் எழுதினார். குறிப்பாக அதிக ஆபத்துள்ள கொரோனா தொற்று உள்ளவர்களின் உயிரைக் காப்பாற்ற இந்த மருந்து உதவும் என்று அவர் பரிந்துரைத்தார். Read More

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சைனோபாம் தடுப்பூசிகள்!!

சீனாவிலிருந்து மேலும் 2.3 மில்லியன் டோஸ் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன. அத்துடன் சீன இராணுவத்தினரால் இலங்கை முப்படையினருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 3 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடைந்துள்ளது. இதேவேளை நாடளாவிய ரீதியில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read more

மருத்துவரின் 12 வயது மகளுக்கு பைசர் தடுப்பூசி போட்ட சம்பவம் – புலனாய்வு பிரிவு எடுத்துள்ள நடவடிக்கை!!

சிலாபம் ஆரம்ப பாடசாலையில் உள்ள தடுப்பூசி மையத்தில் மருத்துவர் ஒருவரின் 12 வயது மகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணையை ஆரம்பித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியக இயக்குனர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதில் ஏதேனும் தவறு இருந்தால் அவர்கள் மீது Read More

Read more

நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் விசேட அறிவித்தல் விடுத்த இராணுவ தளபதி!!

நாட்டில் எதிர்வரும் 30ம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், தற்போது செப்டம்பர் மாதம் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை தொடர்ந்தும் நீடிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் தற்போது செயற்படும் அனைத்து அத்தியாவசிய சேவைகளும், வழமை போன்று எதிர்வரும் 6ம் திகதி வரை தொடர்ந்தும் இடம்பெறும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், ஊரடங்கு காலப் பகுதியில் தொழிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளோர், வழமை போன்றே தொழிலுக்கு Read More

Read more