ரசிகர்களை சோகத்திலாழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஆல்ரவுண்டர் ‘கீரன் பொல்லார்ட்'(Kieron Pollard) அறிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை  123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு  தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடிய அவர்   அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு Read More

Read more

“நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது……” குமார் சங்ககார!!

ரம்புக்கனையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்து பலர்காயமடைந்த சம்பவத்திற்கு சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரர் குமார் சங்ககார தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். குமார் சங்ககாரவின் Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில், நிராயுதபாணியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக மரண சக்தியைப் பயன்படுத்துவது மனசாட்சிக்கு விரோதமானது. மன்னிக்க முடியாதது. மக்களின் உயிரைப் பாதுகாப்பது காவல்துறையின் முதல் பொறுப்பு. இது வெட்கக்கேடான கொடூர நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

Read more

T20 பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் 6 ஆம் இடத்தைப் பிடித்தார் “வனிந்து ஹசரங்க”!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் T20 போட்டிகளின்  பந்துவீச்சாளர்களுக்கான புதிய தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் Tabraiz Shamsi 784 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பந்துவீச்சாளர் Adil Rashid 746 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும், அவுஸ்திரேலிய வீரர்களான Josh Hazlewood மற்றும் Adam Zamba முறையே மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களிலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் இலங்கையின் ‘வனிந்து ஹசரங்க’ 687 புள்ளிகளுடன் 6 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.

Read more

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில்!!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓகஸ்ட் 27 ஆம் திகதிக்கும் செப்டம்பர் 11 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட கால பகுதியில் இலங்கையில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் டி20 முறையில் விளையாடப்படும் எனவும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் 20ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் கிடைக்க பெற்றுள்ளன. ஆசியக் கோப்பைப் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாகும் ஆனால் கொவிட்-19 மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய Read More

Read more

தமிழ் பெண்ணை மணமுடிக்கவுள்ள கிளென் மெக்ஸ்வெல்!!

அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மெக்ஸ்வெல் தமிழ் பெண் வினி ராமன் என்பவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார். கிளென் மெக்ஸ்வெல் அவுஸ்ரேலியாவில் வளர்ந்த தமிழகத்துப் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்தார். வினி ராமன் அவுஸ்ரேலியாவில் பார்மஸி படித்தவர். இவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு இந்திய முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அதன்பின்னர், கொரோனா அச்சுறுத்தல், லொக்டவுன் என நெருக்கடியான நிலை தொடர்ந்ததால் அவர்களது திருமணம் தள்ளிப்போனது. இந்நிலையில், கிளென் மெக்ஸ்வெல், வினிராமன் திருமணம் வரும் Read More

Read more

எம்.எஸ் தோனியின் சூப்பர் ஹீரோ அவதாரம் …… தீயாய் பரவும் புதிய லுக்!!

ரமேஷ் தமிழ்மணியின் ‘அதர்வா: தி ஒரிஜின்’என்ற கிராபிக்ஸ் நாவலில் வரும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம். இந்நிலையில், தற்போது எம்.எஸ். Read More

Read more

இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற வாய்ப்பு – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்கிறார்

எம்எஸ் டோனி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரின் பேட்டிங் திறனை இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி. 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை டோனி பெற்றுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. Read More

Read more

பானுக ராஜபக்ஸவிற்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை!!

கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஸவிற்கு 02 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதேநேரம், ஐயாயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஆகியவற்றில், கிரிக்கெட் ஒப்பந்தத்தை மீறி கருத்து தெரிவித்ததன் பின்னணியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read more

குசால் மெண்டிஸ், குணதிலக, திக்வெல்லவுக்கு தடை?? வெளியான முக்கிய தகவல்!!

பிரித்தானியாவில் பயோ பபுள் விதிகளை மீறிய இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சசையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, நிரோசன் திக்வெல்ல ஆகியோரை இடைநீக்கம் செய்த இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு, 3 பேரையும் Read More

Read more

7 வருடங்களாக தொடரும் தோல்வி பயணம் – கவலையில் மூழ்கிய இந்திய அணி ரசிகர்கள்!!

கடந்த 7 வருடங்களில் இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிவரை சென்று தோல்வியைச் சந்திக்கும் இந்திய அணியின் இந்த பயணம் 7 வருடங்களாக தொடர்ந்து தான் வருகிறது. 6ஆவது நாள் வரை நீடித்த இறுதிப் போட்டியில், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும், பும்ராவின் பந்து எடுபடாமல் போனது காரணமாகவும் புளு ஆர்மி தோல்வியை Read More

Read more